யோகிபாபு, கௌரி கிஷான், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ‘போட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு . தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ஏரளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள புதிய படமே போட் . சிம்பு தேவன் இயக்கத்தில் தரமாக தயாராகி உள்ள இப்படத்தில் யோகிபாபுவுடன் கௌரி கிஷான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

<a href=https://youtube.com/embed/1FP5TYIvODQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1FP5TYIvODQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">