சிறு சிறு குறைகளை விமர்சிக்கலாம்... அதுக்காக கட்டம் கட்டி விமர்சிப்பது தவறான விஷயம் - பாக்யராஜ்..!
சூர்யா நடிப்பில் வெளியான படங்களுள் ஒரு வணிக ரீதியான வெற்றிப் படம் கொடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதிலும் கங்குவா திரைப்படம் சுமார் மூன்று வருட உழைப்புக்கு மத்தியில் கடும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனாலும் தோல்வியைத் தான் தழுவியது.
இதைத்தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கங்குவா படத்தை மோசமாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். அது மட்டும் இன்றி சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து வந்தார்கள்.
எனினும் கங்குவா திரைப்படம் ஓடிடியில் வெளியாக முன்பு இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுக்கப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள், இதனை படம் ரிலீஸ் ஆன போதே செய்திருந்தால் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் கங்குவா படம் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், கங்குவா திரைப்படத்திற்கு இவ்வளவு விமர்சனங்கள் வருகின்றதே, படம் எப்படி இருக்கின்றது என்பதைக் காண திரையரங்கில் சென்று பார்த்தேன். இந்தப் படம் அருமையாக இருந்தது. நல்ல படம்தான்.
சிறு சிறு குறைகளை விமர்சிக்கலாம். மக்கள் அந்த படத்தை பார்த்துடவே கூடாது என்பதற்காக கட்டம் கட்டி கடுமையாக விமர்சிப்பது ரொம்ப தவறான விஷயம். நம்முடைய சினிமாவை நாமே வீழ்த்த கூடாது பொறுப்புடன் விமர்சனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.