அந்த நடிகையை பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்ன யங் ஹீரோ.. கதறி அழுதுட்டாராம்..

 

மெல்ல பேசுங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பானுப்ரியா.150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். சத்ரியன், தளபதி, அழகன், பரதன், சுந்தர காண்டம், அமரன், வானமே எல்லை, நீங்க நல்லா இருக்கணும், உழவன், சக்கரவர்த்தி என பல படங்களில் ஹீரோயினாக நடித்த பானுப்ரியா குணசித்ர கதாபாத்திரங்களிலும் அம்மா வேடங்களிலும் அதன் பின்னர் நடித்துள்ளார்.

பல படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்த பானுப்ரியாவுக்கு சமீப காலமாக மறதி நோய் ஏற்பட்டு இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார்..

முன்பு போல வசனங்களை நினைவில் வைத்துக் கொண்டு பேச முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே சினிமாவில் இருந்து நடிப்பதையே நிறுத்திக் கொண்டேன் என பேசியுள்ளார் செய்யாறு பாலு

சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போது ரொம்பவே வசனங்களை மறந்து விட்டு தவித்தேன் என்றும் அந்த படத்தில் ஹீரோவுக்கும் அந்த நடிகைக்கும் நிறைய காம்பினேஷன் காட்சிகள் இருந்த நிலையில், ஒண்ணு டயலாக்கை மாத்து இல்லை இந்தம்மாவை மாத்து என அந்த நடிகர் பேசியதாக செய்யாறு பாலு பகீர் கிளப்பி உள்ளார். யாரு அந்த நடிகர் என்பது குறித்து பானுப்ரியா அந்த பேட்டியில் ரிவீல் செய்யாமல் தன்னுடைய பக்குவத்தை இப்படியொரு பிரச்சனையிலும் அவர் விட்டு விடவில்லை என செய்யாறு பாலு பானுப்ரியா பற்றி பேசியிருக்கிறார்.

80ஸ் ரீயூனியன் நிகழ்ச்சிகளை நடிகர்கள் நடத்தும் போது கூட தன்னை அவர்கள் அழைப்பது கிடையாது என்றும் அவ்வளவு தான் சினிமா என ரொம்பவே வருத்தப்பட்டும் பானுப்ரியா பேசியிருப்பதாக கூறியுள்ளார். நடிகர்களின் வீட்டில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ராதிகா சரத்குமார், மீனா உள்ளிட்ட நடிகைகளை அனைவரும் தவறாமல் அழைத்து வருகின்றனர். ஆனால், பானுப்ரியாவை எங்கேயுமே பார்க்க முடியவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு இதுதான் காரணம் என்பது தற்போது தெளிவாகி இருக்கும்