அனுமதியின்றி அஜித் மகளை வீடியோ எடுத்த இளைஞர்..! குவியும் கண்டனங்கள்..!
நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா தனது தோழியுடன் ஒரு அறையில் ஆடைகளை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியும் அதே அறையில் ஒரு இளைஞர் உட்கார்ந்து இருக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை எடுத்த நபர் அனோஷ்காவிடம் அனுமதி இல்லாமல் எடுத்தது போன்றும் அந்த அறையில் இருந்து வெளியேறுங்கள் என்று சொல்வது போன்ற காட்சி அந்த வீடியோவில் உள்ளன.
அஜித்தின் மகள் அனோஷ்கா அந்த அறைக்கு உடைமாற்ற சென்றாரா அல்லது புதிய ஆடைகளை வாங்குவதற்கான சென்றாரா என்று தெரியவில்லை என்றாலும் இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது.
முன்பின் தெரியாத ஒருவரை வீடியோ எடுக்கும் போது கண்டிப்பாக அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பாக பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளை அவர்களுடைய சம்மதம் இல்லாமல் வீடியோ எடுப்பது சட்டப்படி தவறு என்றும் இந்த வீடியோவுக்கு யாரும் ஆதரவு தர வேண்டாம் என்றும் அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.