என்னாச்சு ? பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!
Dec 5, 2024, 06:05 IST
பிரபல காமெடியன் பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை முழுமை பெற அவர் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
சீரிய முயற்சிகளாலும், சர்ச்சைகளாலும் தொடர்ந்து விவாதங்களில் இடம்பிடித்த பவர்ஸ்டார், தற்போது முழுமையான உடல் நலத்துடன் திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.