ஒரே நாளில் 2 முறை திருமணம் செய்யப்போகும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை மணக்க போவதாக அறிவித்தார்.இதனால் ரசிகர்கள் குஷியாகி யார் அவர் என தேடி வந்த நிலையில் அவரே தனது சமூகவலைதளப்பாக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் (Antony Thattil) என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்ததினால் மதம் ஒரு பிரச்சனை இல்லை என்று திருமணத்திற்கு முடிவு செய்தனர்.
இதையடுத்து டிசம்பர் 12ம் தேதி அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனிக்கும் கோவாவில் வைத்து திருமணம் நடைபெற்றிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் திருமணம் மாப்பிள்ளைக்காக கிறிஸ்தவ முறைப்படி மட்டுமே நடக்கிறதாம் என தகவல் வெளியான நிலையில் இல்லை டிசம்பர் 12ம் தேதி காலை இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது.
அன்று மாலையே தேவாலயத்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஆக, ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் நடக்கிறது. கீர்த்தியும், ஆண்டனியும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.