வெந்நீரில் மிளகாய் பொடி போட்டு மருமகனை கொன்ற மாமியார்..!!

மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் வெந்நீர் ஊற்றிக் கொலை. கடந்த 2 வாரங்களாக மருத்துவமனையில் இருந்த இளைஞர், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
 

மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மிளகாய் பொடி கலந்த வெந்நீரால் தாக்கப்பட்ட மருமகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜூக்கு (27) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா (22) என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த செல்வராஜ், திருமணத்துக்கு பிறகு மாமியார் வீட்டிலேயே இருந்துவிட்டார்.

குடிப்பழக்கத்துக்கான அடியமையான இவர், வீட்டுக்கு வந்ததும் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் தனது மகள் சந்தியாவிடம் கூறிவிட்டார். உடனடியாக கணவரை அவரும் தனது கணவரை கண்டித்துள்ளார். எனினும் செல்வராஜ் தொடர்ந்து மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி குடித்துவிட்டு வீடு திரும்பிய செல்வராஜ், வழக்கம் போல மாமியாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மனம் வெறுத்த மாமியாரும் அவருடைய மகள் சந்தியாவும் செல்வராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். கொதிக்கும் வெந்நீரில் மிளகாய் பொடி கலந்து செல்வராஜ் மீது ஊற்றிவிட்டனர். இதனால் எழுந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக செல்வராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த 2 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று காலை செல்வராஜ் உயிரிழந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறை, சந்தியாவையும் அவருடைய தாயாரையும் கைது செய்தான்ர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.