பெண்களின் உள்ளாடைகளுடன் தோன்றும் ஆண் மாடல்கள்..!!

பெண் மாடல்கள் ஆன்லைனில் உள்ளாடைகளை காட்சிப்படுத்த சீனா தடை விதித்ததை அடுத்து, ஆண் மாடல்களுக்கு பெண்களின் உள்ளாடை அணிவித்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
 

ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தை மீறியதற்காக, உள்ளாடைகள் அணிந்து பெண் மாடல்கள் விளம்பரங்களில் தோன்றுவதற்கு சீன அரசு தடை விதித்துவிட்டது. இதனால் கிடைக்கும் வருவாயை இழக்க விரும்பாத நிறுவனங்கள் பல, புஷ்-அப் ப்ராக்கள், இறுக்கமான கோர்செட்டுகள் மற்றும் லேஸ் டிரிம் செய்யப்பட்ட நைட் கவுன்கள் உள்ளிட்ட பெண்களின் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்ளாடை லைவ்ஸ்ட்ரீம் வணிகத்தின் உரிமையாளர் சூ. ஜியுபாய், தனிப்பட்ட முறையில் வேறு வழியில்லை. காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் பெண்களுக்குரியது தான். அரசின் புதிய நடவடிக்கையால், உள்ளாடைகளை பெண்களுக்கு அணிவிக்க முடியாது. அதற்கு பதிலாக ஆண் மாடல்களுக்கு பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த லைவ்ஸ்டீரிம் தளம் டிக்டாக்கிலும் இயங்கி வருகிறது. அதே நிறுவனம் பெண்கள் அணியும் பட்டுத்துணிகளை, ஆண்கள் அணிவித்து லைவ் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. சீனாவின் பண்பாடு சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், அவற்றை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.