படையப்பா மெட்ட சுட்டுப் போட்ட இமான்..! இசையமைப்பாளரை நாசுக்கா கலாய்த்த ரஜினி..!!

 
1

ரஜினிகாந்தின் நடிப்பில் இசையமைப்பாளர் இமான் இசையில் எஸ்.பி.பி.யின் அதே கம்பீர குரலில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் கடந்த 4-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

யூடியூப்பில் வெளியான சிலமணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. கேட்டவுடன் பற்றிக்கொள்ளும் தீபாவளி பட்டாசாய் அண்ணாத்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ள நிலையில் அண்ணாத்த பாடலின் பின்னணி இசையும், 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ரஜினியின் அறிமுகப் பாடலான எம்பேரு படையப்பா.... பாடலின் பின்னணி இசையும் ஒரே மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அண்ணாத்த பாடலின் மெட்டை இசையமைப்பாளர் இமான் சுட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் படையப்பா பாடலின் இன்ஸ்பிரேசனில் அமைத்திருப்பார் என்றும் அதனால் அப்படி இருப்பதாக இசை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இமானிடம் பேசிய ரஜினி படையப்பா பாடலுக்கு அப்புறம் அதே வைப்ரேசனை அண்ணாத்த பாடலில் உணர்ந்ததாக கூறினார் என்று இமான் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்கு அண்ணாத்த பாடல் , படையப்பா பாட்டு போல இருப்பதாக ரஜினி நாசுக்காக சொல்லி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதே போன்றதொரு சர்ச்சை அனிருத் இசையமைத்த தர்பார் அறிமுக பாடலுக்கும் ஏற்பட்டது. அதற்கெல்லாம் முன்பாக 1997-ம் ஆண்டு வெளியான ரஜினியின் அருணாச்சலம் படத்தில் இடம் பெற்ற சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடல், தந்தனத்தோம் என்று சொல்லியே என்ற வில்லுப்பாட்டுக்காரன் பாடலின் இன்ஸ்பிரேசனில் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web