அட்றா...! வெளியானது ரஜினியின் அண்னாத்த பட டீசர்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை குவித்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பஞ்ச் டயலாக்குகள், கலர்ஃபுல்லான காட்சிகள், அசரடிக்கும் சண்டைக் காட்சிகள் என கவனிக்கத்தக்க அம்சங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன
வெறும் 1.45 நிமிடம் ஓடக்கூடிய டீசரில் ரஜினிகாந்த் பேசும் பஞ்ச் வசனங்கள், அவருடைய அதிரடி ஆட்டிட்யூட் போன்ற அம்சங்கள் மட்டுமே உள்ளன. படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் டீசரில் இடம்பெறவில்லை.
முன்னதாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகமே என்று சொல்லப்பட்டது. ஆனால் டீசர் வெளியீட்டின் மூலம் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாவது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.