அப்போ அஞ்சலி; இப்போ பொன்னியின் செல்வன்- மீண்டும் தமிழில் பாபு ஆண்டனி..!

 
பாபு ஆண்டனி

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள நடிகர் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் பாபு ஆண்டனி.  கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

எனினும் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தளவே கிடைத்துவந்தன. இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் பாபு ஆண்டனி வில்லனாக நடித்தார். அதை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் படத்தில் அவர் நடிக்கிறார்.

பொன்னியின் செல்வன் கதையில் வரக்கூடிய சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web