இது தெரியுமா ?  இந்த நடிகை தான் விஜய்யுடன் குத்து பாடலுக்கு ஆட போகிறாராம்..! 

 
1

நடிகர் விஜய் 90சிலிருந்து பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தற்போது ஒரு பெரிய பிரபலமான நடிகராகவும், அதிக அளவில் ரசிகர்களையும் பெற்று வந்த ஒரு நடிகராக இருந்து உள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரையும் வைத்து கட்சியின் வேலைகளை செய்து வருந்துகிறார். மேலும் 2026 ஆம் வருடம் வரப்போகும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், இனிமேல் முழுமையாக அரசியலையே பார்க்க போவதாகவும் திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். தற்போது கடைசியாக இரண்டே திரைப்படங்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு திரைப்படமான கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடந்து கொண்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக  மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற பல பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். விஜய் படங்களில் குத்து பாடல்கள் அமைவது எப்போதும் நடப்பது தான். மேலும் அவர் திரைப்படத்தில் அமைந்திருக்கும் அனைத்து குத்து பாடல்களும் அதிக அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் தற்போது கோட் திரைப்படத்திலும் ஒரு குத்து பாடல் அமையப் போகிறது என்று செய்திகள் வெளியாகிறது. மேலும் அந்த குத்து பாடலில் பிரபல டோலிவுட் நடிகையாக உள்ள ஸ்ரீலீலா விஜயுடன் இணைந்து நடனமாட போவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும்  தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகை ஸ்ரீலீலா மகேஷ் பாபு உடன்  இணைந்து குண்டூர் காரம் என்னும் திரைப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு சூப்பராக நடனமாடி  அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருந்தார். 

இந்தப் பாடல் இப்போதும் இன்ஸ்டாகிராம் facebook இருக்கு என்றால் அதிக அளவில் ரீல்ஸ்களை ரசிகர்கள் செய்யும் பாடல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை சூப்பராக நடனமாடி அதிக அளவில் ரசிகர்களை பெற்றதால் அதன் தொடர்ச்சியாக பல விளம்பரங்களிலும் இவர் தற்போது நடிப்பு வருகிறார். தற்போது அதன் தொடர்ச்சியாகவே விஜயின் கோட் திரைப்படத்திலும் ஐட்டம் சாங் ஆடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பாடலும் அதிக அளவில் ரீச் ஆகும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் மற்றும் ஸ்ரீலீலாவின் காம்போ எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்துக்கொண்டு உள்ளனர். அப்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web