குவியும் வாழ்த்துக்கள்.... இரட்டை குழந்தைக்கு தாயானார் பாடகி சின்மயி..!! குழந்தைகளின் பெயர் தெரியுமா ?

 
1

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான ‘கன்னத்தில் முத்தமின்னால்’ படத்தில் இடம்பெற்ற 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் சின்மயி பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு ஏராளமான தமிழ் பாடல்களை பாடினார்.

 

ஏ.ஆர.ரகுமானின் இசையில் தொடர்ச்சியான பாடல்களை பாடினாலும், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் சின்மயி குரல் ஒளித்தது. இதன் பின்பு மற்ற மொழி படங்களிலும் குறிப்பாக இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் பாடியுள்ளார். அத்துடன் பல படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

chinmayi

இவர் 2014-ம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள தம்பதி, இரட்டை குழந்தையில் ஒரு ஆண், ஒரு பெண் பிறந்துள்ளதாகவும் சின்மயி பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அவர் தனது சமூக வலைதளங்களில் இந்த குழந்தைகள் வாடகை தாயின் மூலம் பெற்ற குழந்தையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


இந்த கேள்விகளுக்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாடகி, “நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாததால், எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா என்று என்னிடம் மெஜேஜ் செய்து கேட்கும் நபர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் என்னைப் பாதுகாத்துக் கவனமாக கொண்டதால் எனக்கு தெரியும். இது எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள் ஆகியவற்றிக்கு மட்டும் நான் கர்ப்பமாக இருந்தது தெரியும் என்று பதில் அளித்துள்ளார்.

From Around the web