திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு செல்லும் நாக சைதன்யா-சோபிதா தம்பதி..!

 
1

நடிகர் நாகசைத்தனியாவை காதலித்து திருமணம் முடித்துக்கொண்டார் நடிகை சமந்தா.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர். அதன் பின்னர் நாகசைத்தன்யா தனது சினிமா துறையில் பயணிக்க நடிகை சமந்தா தனது சினிமா துறையில் பயணித்தார். 

உடல் கோளாறு காரணமாக கொஞ்சம் துவண்டு இருந்த சமந்தா பின்னர் மீண்டும் உடல் நிலை தேறி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாகசைத்தன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

இவர்களின் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று  வருகிறது. இன்று அவர்களின் திருமணமும் நடைபெற்றது. இருவருக்கும் இன்று டிசம்பர் 4, 2024 ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்றது. ஷோபிதா தனது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இவர்களின் திருமணத்திற்கு நடிகர் நாகார்ஜுனா 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. 

முக்கிய பல பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.  இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்கள் கோவிலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

From Around the web