நடிகை நளினி பேசிய உருக்கமான பேட்டி..! 

 
1

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நளினி, ராமராஜனை விவாகரத்து செய்த பின், சீரியல் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனது காதல் குறித்து பேசி உள்ளார். நான் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது, நான் நடித்த 24 படத்திற்கு அவர் தான் உதவி இயக்குநராக இருந்தார்.

அப்போது தான் அவருக்கு என் மீது காதல் வந்தது, என்னுடைய மேக் அப் போடும் பெண்ணிடம் காதல் கடிதத்தை கொடுத்து அனுப்புவார். ஒரு கட்டத்தில் எனக்கும் அவர் மீது காதல் வந்ததால், வீட்டுக்கு பெண் கேட்டுவாருங்கள் என்றேன். ஆனால் வீட்டில் பெற்றோர் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் ஓடி போய் திருமணம் செய்து கொண்டோம். ஒரு மாதம் தலைமறைவாக இருந்தோம். அப்போது எம்ஜிஆர் தான் என் பெற்றோரை சமாதானப்படுத்தினார்.

13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன் திடீரென இருவருக்கும் விவாகரத்தானது. திடீரென வாழ்க்கை அப்படி மாறும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவர் தான் என் உலகம் என்று இருந்தேன், இருந்தாலும் குழந்தைகளுக்கான வெறியுடன் ஓடி உழைத்து இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். விவாகரத்தாகி 25 ஆண்டுகள் ஆன போதும், என் புருஷன் இடத்துல யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என நளினி மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.

From Around the web