நயன்தாரா கட்டியிருந்த வாட்ச் ரேட் என்ன தெரியுமா???

 
1

நடிகை நயன்தாரா திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து தற்போது அவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். அவ்வபோது அவர்கள் குடும்பமாக எடுக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டு வருவார். அவை அதிக அளவில் பகிரப்பட்டு லைக்குகளை அள்ளி வரும். சமீபத்தில் கூட நயன்தாரா தனது நண்பர்களுடன் கேரளாவில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலானது.

 

அதன் பின் தற்போது தொடர்ந்து குடும்பத்துடன் தனது நேரத்தை கழித்து வரும் நயன்தாரா அவரின் வீட்டின் மேல் பகுதியிலேயே ஒரு அலுவலகத்தையும் அமைத்து அவரின் பிசினஸையும் பார்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகிறது. இதுவும் இணையதளங்களில் அதிக அளவில் வைரலாகி வந்தது. இப்படி தொடர்ந்து நடிகை நயன்தாரா செய்யும் அனைத்தும் இணையங்களில் எப்போதும் வைரலாகி கொண்டே தான் இருக்கும். அதேபோலத்தான் தற்போது நயன்தாரா கட்டிய வாட்ச் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிரபல இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின், கமலஹாசன்,  சூர்யா, கார்த்தி மற்றும் விக்ரம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் நயன்தாரா மிகவும் அழகாக லைட் கலர் சாரி இல் சூப்பராக வந்திருந்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் தன் கணவருடன் நயன்தாரா எடுத்த புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் லைக்குகளை தட்டி வந்தனர். அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கட்டியிருந்த வாட்ச் ஒன்று அனைவரின் கண்களையும் ஈர்த்தது. அந்த வாட்ச் என்ன பிராண்ட் என்பதும் அதன் விலை என்ன என்பதும் தற்போது வெளியாகி உள்ளது!! சங்கரின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நயன்தாரா கையில் கட்டி இருந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36 என்பதாகும். மேலும் அந்த வாட்ச் பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் போன்றவற்றைக் கொண்டுள்ளது ஆகும். இந்த வாட்ச் எப்பொழுதும் பார்ப்பதற்கு ஒரு மினுமினுப்புடன் ஜொலிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பதற்காக  Oystersteel இன்று உலகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் இந்த வாட்சின் விலை என்னவென்று பார்த்தால் ரூ.5.30 லட்சம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா 2023 ஆம் ஆண்டில் அன்னபூரணி திரைப்பட விழாவில் கட்டி இருந்த வாட்ச் ஒன்று ட்ரெண்ட் ஆனது. அதன் விலையும் ரூ. 5.57 லட்சம்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் கட்டியிருந்த வாட்ச் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

From Around the web