பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : என்னடி பண்ணுவ...அரசி கழுத்தை பிடித்து நெறிக்கும் குமார்..!

நீ எப்ப உன் புகுந்த வீட்டுக்கு கிளம்ப போற என பார்வதி கேட்கிறாள். இதனால் அதிர்ச்சி அடையும் தங்கமயில், நான் என்னம்மா பண்ணுவேன் என கேட்க, நீ உன் புருஷன் கூட சேருறதுக்கு எந்த முயற்சியும் பண்ண மாதிரி தெரியலை. உனக்கு ரெண்டு நாள் டைம் தர்றேன். அதுக்குள்ள உன் புருஷனை சமாதானம் செய்ற வழியை பாரு என்கிறாள். அதற்கு மயில், நானா உங்களை பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க சொன்னேன்.
போலி நகையெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி வைச்சது நீங்க தான் என சொல்கிறாள். அதற்கு பார்வதி பொய் சொன்னது பத்தி மட்டும்தான் பேசுற. ஆனால் நாங்க கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வைச்சது பத்தி எச மாட்ற. உனக்கு எட்டு பவன் ஒரிஜினல் நகை போட்டு, கடன் வாங்கி கல்யாணம் பண்ணி வைச்சு இருக்கேன். நீதான் உன் வாழ்க்கையை பார்த்துக்கனும் என சொல்லி விடுகிறான். இதனால் தங்கமயில் என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறாள்.
மற்றொரு பக்கம் பணத்தை எல்லாம் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துட்டு போய் விட்டதால் முத்துவேல், சக்திவேல் அப்செட்டில் இருக்கின்றனர். அப்போது மாரி, அம்மா என ஒவ்வொருவராக கேள்வி எழுப்புகின்றனர். இதனையடுத்து சக்திவேல் எல்லாம் இந்த வீட்டுக்கு புதுசா வந்த இவள் தான் என அரசி மீது பழியை போடுகிறான். இவளோட ராசி தான் இதுக்கெல்லாம் காரணம் என சொல்கிறான். இதனால் அவனுடைய கடுப்பாகி, எதுக்குடா சம்பந்தம் இல்லாம பேசுற. நீ உள்ள போம்மா என சொல்லி அரசியை அனுப்பி வைக்கிறாள்.
இதனையடுத்து குமாரிடம் உன் பொண்டாட்டியை இந்த மாதிரி உன் அப்பன் சொல்லிட்டு இருக்கான். நீ என்னடா அமைதியா இருக்க என கேட்கிறாள். அதற்கு அவன் அப்பா சொல்றதுல தப்பு இல்லையே என்கிறான். இதனையடுத்து முத்துவேல் யார் இதெல்லாம் பண்ணதுன்னு மொத கண்டுபிடிங்க. யாரோ தகவல் சொல்லாம ரெய்டு நடக்க வாய்ப்பில்லை என சொல்கிறான். இதனையடுத்து போன பணத்தை எல்லாம் திரும்பி வாங்க முடியாத என அம்மா கேட்க, நாங்க ஜெயிலுக்கு போகாம இருக்கிறதே பெரிய விஷயம் என சொல்லி ஷாக் கொடுக்கிறான் சக்திவேல்.
இதனிடையில் சரவணை எப்படியாவது நேரில் பார்த்து பேசி சமாதானம் செய்து விடலாம் என நினைத்து அவனை தேடி கடைக்கு வருகிறாள் தங்கமயில். அப்போது அவன் வேலை பார்க்கும் கடையில் இல்லை. இதனால் அவனுக்கு போன் பண்ணுகிறாள். மற்றொரு பக்கம் தனது அப்பா கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான் சரவணன். அவனுடைய போன் கல்லா பெட்டி பக்கத்தில் இருக்க, மயில் போன் பண்ணியது அண்ணி கூப்பிடுறாங்க என்கிறான் செந்தில். உடனே சரவணன் அப்பறம் பேசிக்கிறேன்டா. நீ ஆஃப் பண்ணி வை என சொல்கிறான்.
ஆனாலும் தங்கமயில் மறுபடியும் கூப்பிட, செந்தில் நீ பேசுண்ணே என்கிறான். அதற்கு சரவணன், வேலை நேரத்துல என்னடா? நான் அப்பறம் பேசிக்கிறேன் என சொல்லி சமாளிக்க பார்க்கிறான். ஆனால் செந்தில் விடாப்படியாக அண்ணனிடம் போனை கொடுத்து பேச சொல்கிறான். இதனால் சரவணன் வேற வழி இல்லாமல் போனை எடுத்து கொண்டு வெளியில் வருகிறான். அங்கு வந்தும் தங்கமயில் போனை எடுக்காமல் எடுக்கிறான். இதனால் அவள் சரவணன் கடையில் வேலை பார்க்கும் ஒருவனிடம் போனை வாங்கி அவனுக்கு அடிக்கிறாள்.
ஆனாலும் தங்கமயில் மறுபடியும் கூப்பிட, செந்தில் நீ பேசுண்ணே என்கிறான். அதற்கு சரவணன், வேலை நேரத்துல என்னடா? நான் அப்பறம் பேசிக்கிறேன் என சொல்லி சமாளிக்க பார்க்கிறான். ஆனால் செந்தில் விடாப்படியாக அண்ணனிடம் போனை கொடுத்து பேச சொல்கிறான். இதனால் சரவணன் வேற வழி இல்லாமல் போனை எடுத்து கொண்டு வெளியில் வருகிறான். அங்கு வந்தும் தங்கமயில் போனை எடுக்காமல் எடுக்கிறான். இதனால் அவள் சரவணன் கடையில் வேலை பார்க்கும் ஒருவனிடம் போனை வாங்கி அவனுக்கு அடிக்கிறாள்.
இந்தபக்கம் செந்தில் வீட்டுக்கு வந்ததும் பாண்டியன் கொடுத்த பணத்தை வேலைக்காக கொடுத்ததை பற்றி மீனாவிடம் எப்படி சொல்வது என தயங்குகிறான். அதன்பின்னர் அவளிடம் மெல்ல மெல்லமாக பேச்சை ஆரம்பிக்கிறான். மீனா விஷயம் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைகிறாள். உடனே மாமாக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லுங்க என்கிறாள். ஆனால் செந்தில் அதெல்லாம் சொல்ல முடியாது என உறுதியாக கூறி விடுகிறான்.
சரவணன் அண்ணன் கல்யாணத்துக்கு அப்பா அவ்வளவு செலவு பண்ணாரு. அரசியோட கல்யாணத்துக்கும் பணத்தை கொட்டுனாரு. எனக்கு ஒண்ணுன்னு கேட்டால் பண்ண மாட்றாரு. எப்படியும் ஒரு மாசத்துல வேலை வந்துடும். அதுக்கப்புறம் பார்த்துக்கிறேன். நீ முடிஞ்சா என்கூட நில்லு. இல்லைன்னா அப்பாட்ட போய் சொல்லு. என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என சொல்லிவிடுகிறான். இதனால் மீனா கடும் அதிர்ச்சி அடைகிறாள்.
இந்தப்பக்கம் இரவு அரசியிடம் வந்து உன் முழியே சரியில்லை. நீதான் இன்கம்டாக்ஸ்க்கு தகவல் கொடுத்தியா என கேட்கிறான் குமார். அதற்கு அவள் எனக்கு இதெல்லாம் தெரியாது. தெரிஞ்சு இருந்தா தகவல் கொடுத்து இருப்பேன் என கிண்டல் அடிக்கிறாள். அவன் கடும் கோபம் அடைந்து அரசியை அடிக்க கை ஓங்குகிறான். அரசி அவன் கையை பிடித்து தடுத்து, என்மேல கை வைச்சீங்க. நான் திருப்பி அடிப்பேன் என்கிறாள்.
ஆனாலும் குமார் விடாமல், அப்படித்தான்டி அடிப்பேன். என்னடி பண்ணுவ என சொல்லி அரசி கழுத்தை பிடித்து நெரிக்கிறான் குமார். இதனையடுத்து அரசி செய்ய போவது என்ன என்பது குறித்து நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.