பையா 2 படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது நடிகர் முரளி மகன்.. ஆனால் அதர்வா இல்லையாம்..!  

 
1

‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படமாக லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘பையா’ படத்தில் ஒப்பந்தமானார். கமர்ஷியல் பட கதாநாயகனாக நடிகர் கார்த்திக்கு இந்தப் படம் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது.

இந்நிலையில் பையா2 படத்தின் சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளிதான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். ஆகாஷ் முரளி தற்போது விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதிதி ஷங்கருடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

1

From Around the web