ரசிகர்கள் வாழ்த்து! விரைவில் `சுந்தரி’ சீரியல் நடிகருக்கு திருமணம்..!
Nov 15, 2023, 06:05 IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் ஹீரோவின் நண்பனாக நடித்து பிரபலமானவர் நடிகர் அரவிஷ். இவர் தனது திருமணம் குறித்தானத் தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
’திருமகள்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வரக்கூடிய ஹரிகாவுடன் தான் இப்போது அரவிஷூக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. விரைவில் நடக்க இருக்கும் இவர்களது நிச்சயதார்த்தத்திற்கான ஷாப்பிங் முடித்துவிட்டதாக சொல்லும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.