விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பிக்பாஸ் நடிகை தர்ஷா குப்தா உதவி..!
Dec 6, 2024, 07:05 IST
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் பல ஆயிரம் குடும்பங்கள் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளின்றி போராடி வருகின்றன.இந்த பரிதாபகரமான நிலையை அறிந்து, பிரபல நடிகை தர்ஷா குப்தா தனது குழுவுடன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டார்.
அவரது தலைமையில், உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.மேலும், பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க தேவையான பொருட்களை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.நடிகையின் இந்த மனிதாபிமான செயல் பலரின் பாராட்டைப் பெற்றது.“பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன்,” என்று நடிகை தெரிவித்தார்.