மீனாவுக்கு ’அவர்’ ஜோடி; குஷ்புவுக்கு ’இவர்’ ஜோடி- அண்ணாத்த சீக்ரெட்ஸ்..!

 
அண்ணாத்த பட போஸ்டர்
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள மீனா மற்றும் குஷ்புவின் கதாபாத்திர பின்னணி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

நாட்டாமை படத்தை தொடர்ந்து மீனா மற்றும் குஷ்பு மலையாளத்தில் இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘அண்ணாத்த’.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற சமகால கதாநாயகிகள் இருக்கும் போது, இவர்கள் இருவரும் படத்தில் இணைந்தது பல எதிர்பார்ப்பை உருவாக்கியது. மீனா ரஜினிக்கு ஜோடி எனவும், குஷ்பு படத்தில் வில்லி என்றும் கூறப்பட்டது.

ஆனால் அண்ணாத்த படத்தின் டிரெய்லர் வெளியானதை தொடர்ந்து விவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி மீனா மற்றும் குஷ்பு இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு முறைபெண்களாக நடித்துள்ளனர். அதேபோல மீனாவுக்கு ஜோடியாக லிவிங்கிஸ்டனும், குஷ்புவுக்கு ஜோடியாக பாண்டியராஜனும் நடித்துள்ளனர்.

ரஜினிகாந் மற்றும் குஷ்பு மொத்தம் 6 படங்களில் நடித்துள்ளனர். அதில் மூன்று படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதேபோல மீனா ரஜினிகாந்துடன் 7 படங்களில் நடித்துள்ளார். அதில் 3 படங்களில் ரஜினிக்கு ஜோடியாகவும், 2 படங்களில் அவருக்கு மகளாகவும், மற்ற படங்களில் உறுதுனை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மீனா.

From Around the web