பிரபல நடிகை வீட்டில் 10 லட்சம் கொள்ளை..!!

 
1

'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். அந்த படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மலையாள நடிகையான இவர், 'உத்தம வில்லன்', 'என்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'மாலை நேரத்து மயக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.தற்போது தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், சென்னையில் வசித்து வருகிறார். அடிக்கடி சொந்த ஊரான கேரளாவிற்கும் சென்று வருகிறார். 

1

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் அவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது வீட்டில் இருந்த 6 லட்சம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, 3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளளது. அதோடு வீட்டில் பணிபுரிந்த பணியாளர்களும் மாயமாகியுள்ளனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

From Around the web