நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் 10 பவுன் தங்க நகைகள் மாயம்..!

 
நடிகர் சூரி குடும்பத்தினர்
மதுரையில் நடைபெற்ற அண்ணன் மகள் திருமண விழாவில் 10 சவரன் தங்க நகை திருடுபோனதாக அளிக்கப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9-ம் தேதி நடிகர் சூரியின் மூத்த சகோதரர் ஒருவருடைய மகளுக்கு மதுரை சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், அரயா, ரோபோ சங்கர், இயக்குநர் ஆமிர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

அந்த விழாவில் 3 சவரண் தங்க சங்கிலி, 2 பவுன் தங்க சங்கிலி, 5 பவுன் தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூரியாவின் நண்பர் சூர்யபிரகாஷ் கீரைத்துறை குற்றப்புலனாய்வு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

From Around the web