கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கம்..?
Nov 19, 2024, 07:35 IST
கங்குவா படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்ததாலும், ரசிகர்களிடையே பேசுப்பொருளாக மாறியது.
படத்தின் முதல் அரைமணி நேரம் சுவாரஸ்யமாக இல்லை, சத்தம் அதிகமாக உள்ளது என்ற விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் தீவிரமான ட்ரோல்களையும் உருவாக்கின. இதனால், கங்குவாவின் வசூல் பாதிக்கபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், படத்தின் முதல் பாதியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நிகழ்காலத்தில் நடப்பதாக காட்டப்பட்ட 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், சத்தம் அதிகமாக இருந்ததை சரிசெய்து, படம் மீண்டும் சென்சார் செய்யப்பட்டு திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் படம் மீதான பார்வையை மாற்றுமா? வசூலை மேம்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.