தலைவரான தாமிரைச் செல்வி- நாமினேட்டான 15 போட்டியாளர்கள்..!

 
தாமரைச் செல்வி

பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கில் இந்த வார தலைவராக தாமரைச் செல்வி தேர்வாகியுள்ளார். பிரியங்கா, இம்மானுவேல் அண்ணாச்சி உட்பட 15 போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் நடந்தது. பல்வேறு போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்த போட்டியில் சுறுசுறுப்பாக விளையாடி அனைவரையும் வீழ்த்தி தாமரைச் செல்வில் இந்த வார தலைவராக வெற்றி பெற்றார்.

அப்போது அவருடைய வெற்றியை மதிக்காதது போல சின்னப் பொன்னு கருத்து தெரிவித்தார். அதற்காக சமாதானம் பேச சென்ற தாமரைச் செல்வியிடம், தான் விட்டுக்கொடுத்ததுனால தான் அவர் தலைவரானதாக பேசினார். 

அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5-க்கான முதல் நாமினேஷன் நடந்தது. தாமரைச் செல்வி தலைவர் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நடைபெற்ற நாமினேஷன் படலத்தில், நாடியா, நிரூப், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, சுருதி, மதுமிதா, சிபி, வருண், சின்னப்பொண்ணு, அபிநய், அபிஷேக், அக்ஷரா, ராஜு, ஐக்கி பெர்ரி என 15 போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.

நேற்று முதல் நாமினேஷன் தொடங்கியுள்ள நிலையில், தோய்வாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இனி பட்டையை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

From Around the web