உண்மையை உடைத்த நடிகர் : பார்த்திபன் – விஜய் கூட்டணியில் நடந்த 16 திருமணங்கள்...!

 
1

பார்த்திபன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "‘கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு கைவிட்ட படம்...ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்த செலவில் தாலி முதல் மெட்டி வரை சீர் செய்து, சினிமாப் பூஜைகளைப் பயனுள்ளதாகவும் செய்யலாம் எனத் தொடங்கி வைத்தேன். அதுவே பின்னர் பலரால் தொடரப்பட்டது.

ஒருமுறை தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சி தொடங்கும் தைரியத்தைக் கொடுத்தது." என்றார். 

From Around the web