பிக்பாஸ் செட்டில் மேலும் 17 நபர்களுக்கு தொற்று உறுதி..!

 
பிக்பாஸ் செட்டில் மேலும் 17 நபர்களுக்கு தொற்று உறுதி..!

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியில் செட் அமைத்து மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கி வரும் நடிகர் மோகன்லால் வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பிக்பாஸ் செட்டில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

இதற்காக வாரத்தில் புதன்கிழமை தோறும் செட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 15-ம் தேதி வெளியான முடிவில் பிக்பாஸ் மலையாளம் படப்பிடிப்பு குழுவில் உள்ள ஒளிப்பதிவாளர்கள், செட் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட 17 நபர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிலும் ஒரு ஒளிப்பதிவாளர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று உறுதிசெய்யப்பட்ட மற்ற ஊழியர்கள் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

From Around the web