37 வயது தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 17 வயது அறிமுக நடிகை..!

 
37 வயது தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 17 வயது அறிமுக நடிகை..!

நடிகர் தனுஷ் புதியதாக ஒப்புக்கொண்டுள்ள படத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் 17 வயது நடிகையை கதாநாயகியாக அறிமுகம் செய்ய படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்ணன் படத்தின் வெற்றி மூலம் தனுஷ் இந்தியளவில் கவனமீர்த்துள்ளார். இந்தியில் அவர் நடித்துள்ள ‘அந்திரங்கி ரே’ படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கும் தற்போதே எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கிவிட்டது.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளிவரவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 30 நாட்களில் அவர் இந்தியா திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. இந்தியா வந்தவுடன் இங்கு ஒப்புக்கொண்டுள்ள பட வேலைகளில் அவர் பிஸியாக உள்ளார்.

தனுஷை வைத்து மாரி, மாரி -2 போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த பாலாஜி மோகன் அடுத்ததாக முழுக்க முழுக்க ஐ-போனில் தயாராகும் படத்தை இயக்கவுள்ளார். இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தெலுங்கில் ‘உப்பெண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமான 17 வயதான கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளது. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி தமிழிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். இதனால் விரைவிலேயே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது. 

From Around the web