19 வயது இளம் நடிகை மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
 

 
1

சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான ‘டங்கல்’ படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அமீர் கானின் நிறுவனமான அமீர் கான் புரொடக்ஷன்ஸ் இன்று எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளதோடு இரங்கல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், ‘எங்கள் சுஹானி காலமானதைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது தாயார் பூஜாவுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். திறமையான இளம் பெண் சுஹானி இல்லாமல் தங்கல் முழுமையடையாது. சுஹானி, நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள். நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 19 வயதே ஆன சுஹானியின் மரணத்திற்கான காரணம் குறித்து எதிலும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து சில தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில், சுஹானி ஒரு விபத்தில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவுக்குப் பிறகு, மருத்துவ ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், இதற்காக பிப்ரவரி 7ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 16 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்பட்டுள்ளது.


 

From Around the web