ஆர்டர் செய்த உணவில் 2 முறை கரப்பான் பூச்சி..! கடுப்பான பிரபல நடிகை ..!
 

 
1

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்தார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதில்,  ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும்,  சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா பெத்துராஜ் இணைத்துள்ளார்.

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார். 


 

From Around the web