சிறகடிக்க ஆசை 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ப்ரமோ : பணத்தை ஏமாந்து ஓட்டாண்டியான மனோஜ்..! 

 
1

நாளை ஞாயிற்றுக்கிழமை ’சிறகடிக்க ஆசை’ சீரியல் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 மணி நேரம் எபிசோடு ப்ரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் மனோஜிடம் பல்க்காக பொருட்கள் வாங்கிய ஒருவர் கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி விட்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மனோஜ், தனது தாயிடம் உண்மையை சொல்கிறார். அப்போது விஜயா மனோஜை அடித்து இப்படி பணத்தை ஏமாந்துட்டு வந்துட்டியே என்று கூற, வேறு வழியில்லாமல் மீனாவின் நகைகளை எடுத்து கொடுக்கிறார்.அந்த நகைகளை அடகு வைத்தால் பணம் போதாது என்ற நிலையில் மனோஜ் அந்த நகைகளை விற்று விடுகிறார். 

இந்த நிலையில் முத்து தனது அப்பாவிடம் மீனாவின் நகைகளை வாங்கி கொடுங்கள், இன்னொரு கார் வாங்க வேண்டும் என்று கேட்க உடனே விஜயா அதிர்ச்சி அடைத்து மனோஜிடம் போய் நான் கொடுத்த நகைகளை சீக்கிரம் மீட்டுக் கொண்டு வந்து விடு என்று கூற மனோஜ் அந்த நகைகளை விற்று விட்டதாக கூறுகிறார்.

இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது. ஆக மொத்தம் இந்த வாரம் செம காமெடியாக இருக்க போகுது... ரெடியா இருங்க மக்களே 

 

From Around the web