பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த 2 காதல்!

 
1

பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை நடந்து முடிந்த அத்தனை சீசன்களிலும் ஏதேனும் ஒரு காதல் ஜோடி இருக்கும்.

அந்த வகையில் ஆரவ்- நடிகை ஓவியா காதல், மகத்- யாஷிகா காதல், கவின் - லாஸ்லியா, பாலாஜி-ஷிவானி ,அமீர், நடிகை பாவனி, மணி - ரவீனா, பூர்ணிமா- விஷ்ணு ஆகியோரின் காதல் கதைகள் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்து பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னர் முடிவடைகிறது. 

இப்படி இருக்க இந்த பிக் பாஸ் சீசன் 8ல் புதிதாக 2 காதல் மலர்ந்துள்ளது. ஜேக்குலின் சில இடங்களில் முத்துவை பிடிக்கும் பிடிக்கும் என்று சொல்கிறார். ஆனால் முத்துவுக்கு ஏற்கனவே முத்துவுக்கு வெளியில் காதலி இருப்பதாக சொல்லி இருக்கிறார். 

இதனிடையே நடிகர் விஷால் - தர்ஷிகா ஜோடி இருவரும் கடந்த வாரம் நடைபெற்ற ஸ்கூல் டாஸ்க்கில் காதலர்களாக நடித்தனர். அப்போது தனக்கு விஷால் மீது ஒரு ஈர்ப்பு வந்ததாக கூறிய தர்ஷிகா, விஷாலிடமே அதை ஓப்பனாக சொல்லி, இருவரும் தற்போது ஜோடிப் புறாக்களாக பிக் பாஸ் வீட்டில் வலம் வருகின்றனர்.

மேலும் ராணவ் - பவித்ரா ஜோடியின் காதல் கதை கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்கின் போது ஆரம்பமானது. இதில் ராணவ் தான் பவித்ராவை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். ஆனால் பவித்ராவுக்கு ராணவ் மீது எந்தவித லவ்வும் இல்லை என அவரே ஓப்பனாக சொல்லிவிட்டார்.

நேற்று முன்தினம் ராணவ் கொடுத்த பூவை கோபத்தில் தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டார் பவித்ரா. ஆனால் பவித்திராவின் மீது ராணவிற்கு விருப்பம் இருப்பது போலத்தான் இவரின் நடவடிக்கைகள் இருக்கிறது. 

From Around the web