ஒரே நாளில் 2 காதல் காவியங்கள் வெளியாகிறது..!! 

 
1

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. ஆட்டோகிராப் ஸ்டைலில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி போன்று இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை வியகாம் 18 ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. 

1

இந்த படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகை ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நான்கு பெண்களுடன் பயணம் செய்யும் ஒரு ஹீரோவின் கதைத்தான் இந்த படம். இந்நிலையில், இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது.

அதே போல், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காபி வித் காதல்’திரைப்படத்தில் இயக்குநர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

1

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.  இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் ஜீவா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதாவது  ‘காபி வித் காதல்’திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.  

From Around the web