உலகளவிலான பாக்ஸ் ஆஃப்ஸில் துவம்சம் செய்யும் ‘2018’ படம்..!!

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. உலகளவில் இருந்து பல்வேறு உதவிகள் குவிந்ததை அடுத்து, கேரளா மாநிலம் மெல்ல மெல்ல மீண்டது. மீண்டும் புத்துயிர் பெற்று செயல்பாட்டை துவங்கியது.
மீளாத இந்த துயரச் சம்பவத்தை தழுவி மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘2018’. டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள திரை ஆர்வலர்கள் பலரும் இந்த படத்தை எதிர்பார்த்து வந்தனர். இதையடுத்து படம் மே 5-ம் தேதி வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 2018-ம் அண்டு படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இதனுடைய முதல் வார வசூல் விபரம் குறித்து வெளியாகியுள்ளது. வெறும் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெளியாகி, ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது நோபின் பால் இசையமைப்பில் மிகவும் பிரமாண்டமாக இந்த படம் தயாராகியுள்ளது.
கேரளாவை கடந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.