2021 ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு- வெற்றியாளர்கள் முழு விபரம்..!

 
2021 ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு- வெற்றியாளர்கள் முழு விபரம்..!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சினிமா துறையின் உயரிய விருதாக கருதப்பட்டும் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா உலகின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது.

அமெரிக்காவின் அகெடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சையின்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகின்றனர். எப்போதும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்கர் விழா நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா உலகின் பல்வேறு மூலைகளில் ரிமோட் வழியாக நடத்தப்பட்டது. கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்பட்டு தொகுப்பாளர் இல்லாமல் சமூக இடைவெளியுடன் இந்த விழா நடைபெற்று முடிந்தது.

சீனாவை சேர்ந்த குளோயி சாவ் இயக்கிய ’நோமேட்லேண்டு’ படம் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உள்ளிட்ட மூன்று விருதுகளை தட்டிச் சென்றது. இதன்மூலம்  சிறந்த இயக்குநர் பிரிவில் இரண்டாவது முறையாக ஆஸ்கர் விருது வென்ற பெண் என்கிற வரலாற்றை படைத்தார் குளோயி ஜாவ். 

ஃபிளோரியன் ஜெல்லர் இயக்கத்தில் வெளியான தி ஃபாதர் படத்தில் நடித்த ஆந்தோனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். மொத்தம் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் சிறந்த நடிகர் உட்பட சிறந்த தழுவல் திரைக்கதைக்கான பிரிவிலும் ஆஸ்கர் விருதை வென்றது.

சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் டென்மார்க் நாட்டில் தயாரான அனதர் ரவுண்ட் படம் தேர்வு செய்யப்பட்டது. டிஸ்னி - பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் வெளியான சோல் சிறந்த அனிமேஷ் படமாகவும், இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ என்கிற படம் சிறந்த அனிமேஷ் குறும்படம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.

சிறந்த துணை நடிகராக ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா என்ற படத்தில் நடித்த டேனியல் கல்லூயாவும், மினாரி படத்தில் நடித்த யூ ஜங் யூன் சிறந்த துணை நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மே ரையினீஸ் பிளாக் பாட்டம் முக்கிய பிரிவுகளில் விருதுகளை பெற தவறியது.

எனினும் சிறந்த ஆடை வடிவமைப்பு மர்றும் சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் ஆகிய பிரிவுகளில் விருது வென்றது. 
 

From Around the web