கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு முக்காடு போட்டு வந்த ஐஸ்வர்யா ராய்..!!

இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த ஆடை, வழக்கம் போல ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்து இணையதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
 
aishwarya rai

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 76-வது முறையாக மே 16-ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு பல்வேறு நாடுகளில் வெளியான பன்மொழிப் படங்கள் திரையிடப்பட்டன. எப்போது கேன்ஸ் திரைப்பட விழா நடந்தாலும், உலகெங்கிலும் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம்.

இந்தாவில் இருந்தும் பல பிரபலங்கள் இந்த சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்று வருகின்றனர். அவர்களில் ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பங்கேற்று வருகிறார். நடப்பாண்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 17-ம் தேதி பிரான்ஸ் வந்தார். 

இதையடுத்து கடந்த 18-ம் தேதி இரவு நடந்த  "THE INDIANA JONES AND THE DIAL OF DESTINY” படத்தின் திரையீட்டில் கலந்துகொண்டார். அப்போது சிவப்பு கம்பள வரவேற்பில் தோன்றி ஐஸ்வர்யாவை கண்டு, உலகமே வியந்து பார்த்தது.

cannes

சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஒரு பார்டி கவுனை அவர் அணிந்திருந்தார். அதற்கு தலையில் ஒரு ‘ஹூடு’ முக்காடும் இருந்தது. யானைகளின் காது வடிவில் இடுப்பில் ஒரு பெல்டு போட்டிருந்தார். தலை முதல் கால் வரை அவரது உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அவருடைய உடை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஜெகஜோதியாக மின்னும் வகையில் மிரர் செய்யப்பட்ட பார்டி கவுனில், முக்காடு போட்டுக்கொண்டே ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்து வந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலை கிளப்பியுள்ளது.
 

From Around the web