தொடர் பிளாஸ்டிக் சர்ஜரியால் இளம் நடிகர் உயிரிழப்பு..!!

குடும்பத்தினர், மருத்துவர்கள் உட்பட யார் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து 12 முறை உடலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் நடிகர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Saint Von Colucci

அமெரிக்காவில் தயாராகும் படங்களில் நடித்து வந்தவர் செயிண்ட் ஒன் கொலுசி. வளர்ந்து வரும் நடிகராக இருந்த இவருக்கு, தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர் ஜிமின் போன்று மாற விரும்பினார். தோற்றத்தில் அவரைப் போலவே இருப்பதால் கொலுசி இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாடகர் ஜிமின் தோற்றத்துக்கு மாறுவதற்கு வேண்டி சுமார் 12-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை உடலில் மேற்கொண்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொற்று நோய்ப் பாதிப்பு ஏற்படத் துவங்கியது.

அதை பொருட்படுத்தாமல் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, தாடையில் அவர் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதனால் அந்த தொற்றுப் பாதிப்பு உடல் முழுவதும் பரவி உயிரிழந்தார். வெறும் 22 வயதில் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஆசைப்பட்டு செயிண்ட் ஒன் கொலுசி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web