28.9 சதவிகித குழந்தைகள் தினமும் ஏதாவது ஒரு பாலியல் தொல்லையை அனுபவித்து வருகின்றனர் : யுவன்ஷங்கர் ராஜா..!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. 28.9 சதவிகித குழந்தைகள் ஏதாவது ஒரு பாலியல் தொல்லையை தினமும் அனுபவித்துக் கொண்டுதான் வருகின்றனர்.
எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ’குட் டச்’ ‘பேட் டச்’ என்றால் என்ன என்பதை கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். நம்மை சுற்றி உள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு சில நற்குணங்களை சொல்லி வளர்ப்பது பெற்றோர்களின் கடமை.
புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதை பொருளை பயன்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். நமது நாடு பாதுகாப்பாகவும் ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Child sexual abuse in India is a prevalent and devastating issue, with a shocking 28.9% of children experiencing some form of sexual crime.
— Raja yuvan (@thisisysr) March 7, 2024
It is very important and crucial to teach children to differentiate btw good touch & bad touch, also it is very important that we embed… pic.twitter.com/dvtznQccXA