சத்தமில்லாமல் ஒடிடி-யில் வெளியான '3 BHK' திரைப்படம்..!

ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான '3 BHK' திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.சரத்குமார், தேவயானி, சித்தார்த், மற்றும் மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அம்ரித் ராம்நாத். சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட தரமான திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.
சரத்குமார், தேவயானி, சித்தார்த், மற்றும் மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அம்ரித் ராம்நாத். சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட தரமான திரைப்படங்களை Previously இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.
'3 BHK' திரைப்படத்தின் மையக் கரு – ஒரு நடுத்தர குடும்பம் வாழ்க்கையின் ஒரு முக்கிய இலக்காகக் காணும் வீடு வாங்கும் கனவு. பல தடைகள், சமுதாய அழுத்தங்கள் மற்றும் நிதிநிலை சிக்கல்களுக்கு மத்தியில், அவர்கள் அந்த வீட்டைக் காண்கிறார்களா அல்லது விலகுகிறார்களா என்பதுதான் கதையின் சுவாரசிய மையம்.
படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘3 BHK’ திரைப்படம் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி Amazon prime ஓடிடி தளத்தில் சத்தமில்லாமல் வெளியானது.