மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் வெளியாகவுள்ள 3 படங்கள்..!

 
மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் வெளியாகவுள்ள 3 படங்கள்..!

மாரடைப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் விவேக் நடித்துள்ள மூன்று படங்கள் வெளியாகவுள்ள விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

விவேக் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தாராள பிரபு’. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து நடிகர் விவேக் மூன்று படங்களில் நடித்துள்ளார்.

அதில் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’.  இந்த படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகந்த் என்பவர் இயக்கியுள்ள நிலையில், விவேக் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிக்கப்பட்டு, அவரும் டப்பிங் பேசி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது . இந்த படத்தின் டிரெய்லர் கூட சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. அதேபோல ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் விவேக் நடித்து வந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை வெளியிடுவதில் எந்த சிரமும் இருக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் சங்கரின் இந்தியன் 2 மற்றும் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் ஆகியவற்றில் விவேக் சம்மந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதற்குள் விவேக் மறைந்துவிட்டதால் படக்குழுவினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து ஆலோசித்து வருகின்றனர். 

From Around the web