இந்த மாதத்தில் ஒரே நாளில் 4 நடிகர்களின் படம் ரிலீஸ்..! 

 
1

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ சித்தார்த் நடித்த ’சித்தா’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய் ஆண்டனியின் படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ரத்தம்’ என்ற திரைப்படம் அதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’தமிழ்ப்படம்’ ’தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி உள்ள ’ரத்தம்’ படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 


 

From Around the web