சிரஞ்சீவி பிறந்தநாளில் அடுத்தடுத்து வெளியாகும் 4 அப்டேட்டுகள்..!

 
நடிகர் சிரஞ்சீவி
சிரஞ்சீவி பிறந்தநாளில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள, உருவாகி வரும் மற்றும் உருவாகவுள்ள படங்கள் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகரன சிரஞ்சீவி வரும் 22-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆச்சார்யா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மோகன் ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ படத்தின் டைட்டில் போஸ்டர், அஜித்தின் வேதாளம் ரீமேக்கில் நடிப்பது குறித்த அறிவிப்பு மற்றும் மற்றொரு படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல கர்நாடகாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதனால் சிரஞ்சீவியின் நான்கு படங்களுக்கான அப்டேட்டுகள் திரையரங்குகளில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web