பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகபோகும் 4 படங்கள்..உங்க ஃபேவரிட் படம் என்ன..?
Jan 20, 2024, 09:05 IST
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் நீண்ட நேரம் வரும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதே தேதியில் மேலும் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி ஜெயம் ரவியின் சைரன், மணிகண்டனின் லவ்வர் மற்றும் கவினின் ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்கள் மோத உள்ளன.
 - cini express.jpg)