42 வயதில் 10 வயது குறைந்தவரை 2-ம் திருமணம் செய்யும் நடிகை..!

 
மகளுடன் சுரேகா வாணி
கணவர் இறந்த நிலையில் 10 வயது குறைந்த நபரை மகள் சம்மத்துடன், பிரபல நடிகை ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக் காலமாக திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகையர்கள் சிலர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிப்பவர்களை விட சமூகவலைதளங்களில் டிரெண்டாக உள்ளனர்.

அந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் சுரேகா வாணி. தமிழிலும் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து கவனமீர்த்தார்.

கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி மேலும் பிரபலமானார். சமீபத்தில் இவருடைய கணவர் காலமானார். தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணவர் இறந்து இன்னும் ஓராண்டு கூட ஆகாத நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்வது சர்ச்சையாகியுள்ளது. மேலும் திருமணம் செய்துகொள்ளும் அந்த நபர் அவரை விட 10 வயது குறைவானவர் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த திருமணத்திற்கு சுரேகா வாணியின் மகள் சம்மதம் கூறிவிட்டதாகவும், அதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டன. ஆனால் இதை சுரேகா வாணி மறுத்துள்ளார். எனினும் தொடர்ந்து இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

From Around the web