மாலா அக்காவா இது!

 
மாலா அக்காவா இது!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடித்த ரெக்க படத்தில் மூலம் மிகவும் பிரபலமானவர் மாலா அக்கா என்கிற சிஜா ரோஸ்.

2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான கோழி கூவுது படத்தில் நாயகியாக நடித்தாலும் ரெக்க படத்தில் நடித்த மாலா கதாபாத்திரம் தான் அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

படம் சரியாக போகவில்லை என்றாலும் சிஜா ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாலா அக்காவா இது!
 
2016 பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கன்னட சினிமாவில் அறிமுகமாகி மலையாளம் மற்றும் தமிழில் அறியப்படும் நாயகியாக வலம் வரும் சிஜா ரோஸ் படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் கேப் எடுத்துக் கொண்டார்.

இப்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் சிஜா ரோஸ், தனது மாடல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில்  உலவ விட்டுள்ளார்.

மாலா அக்காவா இது!

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. இதை பார்த்த பிறகும் பட வாய்ப்பு தரவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

From Around the web