இந்த 2025ல் கம்-பேக் கொடுக்க காத்திருக்கும் 5 ஹீரோக்கள்..!
நடிப்பின் மன்னனாக விளங்கும் கமல்ஹாசனுக்கும், 2024ஆம் ஆண்டு பெருந்தோல்வியை கொடுத்த ஆண்டாக இருந்தது. ஆனால், இவர் 2025ல் மரண கம்-பேக் கொடுக்க காத்திருக்கிறார். மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்திருக்கும் இவர், அன்பறிவ் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடித்திருக்கிறார்.
விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம், பலரது ரசனையுடன் சரியாக ஒட்டவில்லை. இதனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்த நிலையில், இவர் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் “வீர தீர சூரன் பாகம் 2” படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், அடுத்த அண்டில் வெளியாகிறது. இது, பல ஆண்டுகளாக ஹிட் கொடுக்காத விக்ரமுக்கு பெரிய வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் மற்றும் வேட்டையன் இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படமாவது ஹிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சனுடன் மீண்டும் ஜெயிலர் 2 படம் மூலம் கைக்கோர்க்க இருக்கும் ரஜினிக்கு, அடுத்த ஆண்டு அற்புத ஆண்டாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் படங்கள் எதுவும் கடந்த 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. அவர் தற்போது நடித்திருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களுமே 2025ஆம்ஆண்டில்தான் வெளியாகின்றன. இதனால் இவ்விறு படங்களும் இவருக்கு கம்-பேக் கொடுக்கும் படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவிற்கு பெரிய சறுக்கலாக அமைந்த படம், கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு சில கோடிகளை மட்டுமே வசூலித்தது. 2024ஆம் ஆண்டு சூர்யாவை முடித்து விட்ட ஆண்டாக இருந்தாலும், 2025ல் அவருக்கு ஹிட் கொடுக்க 2 படங்கள் காத்துக்கொண்டுள்ளன. அதில் ஒன்று, ‘ரெட்ரோ’. கார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.