பிரபல நடிகரின் தாய் தந்தைக்கு 50 -ஆம் ஆண்டு திருமண நாள்..!!

 
1

2003 ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி.. அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற அவரின் அடையாளமாக மாறிப் போனது. அப்போதில் இருந்து தற்போது வரை 'ஜெயம் ரவி' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.  

1

இந்நிலையில் பெற்றோரின் 50 –ஆம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் ஜெயம் ரவி, மற்றும் இயக்குநர் மோகன் ராஜா.50-ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களுக்கு திருமணம் நடந்த அதே திருத்தணி கோவிலில் கொண்டாடி உள்ளனர். அதை தொடர்ந்து இருவருமே தங்கள் சமூக வலைதள பக்கத்தில் அந்த அழகிய தருணத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து தாய் தந்தைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அந்த புகைப்படத்திற்கு பல ரசிகர்களும் ,சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

From Around the web