56 வயது பிரபல நடிகர் 23 வயது பெண்ணுடன் திருமணம்..!!

 
1

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ். இவர் 1979ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘நான் வாழ வைப்பேன்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் பப்லு. அதேபோல், ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார்.

1

1994ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 27 வயதில் அஹெத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், பப்லு 23 வயது பெண் ஒருவரை 2வது திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால், பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

From Around the web