பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இன்ஸ்டாவில் பின்தொடரும் 6 பிரபலங்கள்..!! 

 
1

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் பதான் வெற்றிக்கு முன்பும் பின்பும் சில நாட்கள் சமூக ஊடகங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்டிவாக இருந்தார். ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு முகம் சுழிக்காமல் வேடிக்கையான பதில்களையும் கொடுத்தார். இந்த உரையாடல்களின்போது ஷாரூக்கானின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இப்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 36 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர்.

ஆனால், ஷாருக்கான் 6 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். அந்த 6 அதி முக்கியத்துவம் வாய்ந்த, ஷாருக்கான் பின் தொடரும் பிரபலங்கள் யார் என்று பார்த்தால் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருபவர் ஷாருக்கானின் மனைவி கவுரிகான். அவரைத் தொடர்ந்து ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான் ஆகியோரை பின் தொடர்கிறார். இவர்களை தொடர்ந்து மனைவியின் சகோதரி மகளான ஆலியா சிபா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தாத்லானி, நெருங்கிய நண்பர் காஜால் ஆனந்த் ஆகியோரும் அடங்குவர்.

From Around the web