இந்த பொங்கலுக்கு ரிலீசாகும் 6 படங்கள்..!!
 

 
1

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசு திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து, அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

அதே போல் ‘ஆர்ஆர்ஆர்’ ,ராதே ஷ்யாம் பட தயாரிப்பாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர், “எங்கள் இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சூழ்நிலைகள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல இந்திய மாநிலங்கள் திரையரங்குகளை மூடிக்கொண்டிருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் பொங்கலுக்கு வேறு என்ன படங்கள் ரிலீசாக உள்ளது என இனி பார்க்கலாம்….

01.நாய் சேகர் - நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாகும் முதல் படமான நாய் சேகர் 

02.கொம்பு வச்ச சிங்கம்டா - சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா ஜனவரி 13, 2022 அன்று திரைக்கு வரவுள்ளது.

03.‘என்ன சொல்ல போகிறாய்' - ‘என்ன சொல்ல போகிறாய் ‘ படத்தில் அஸ்வின் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார். இந்த காதல் நாடகத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார். இதில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மற்றும் தேஜு அஸ்வினி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.  

04.கார்பன் - உறுமீன்' படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் விதார்த் நடிப்பில் ‘கார்பன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக லட்சுமி ப்ரியா நடித்துள்ளார். 

05. ஐஸ்வர்யா முருகன் - திருமணத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி  ஜனவரி 13-ம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

06.மருத - ராதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மருத’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அதோடு இப்படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

From Around the web